வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக...அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...!

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுவையில் 2 நாட்கள் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் அறிவிப்பு :

தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்கள், தென் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க : குலோப் ஜாமூன் சர்ச்சை...எழுத்துப்பூர்வ விளக்கமளிக்க சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு உத்தரவு!

தொடர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும்,  27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.