சிறந்த பயிற்சி மையமாக தமிழ்நாடு போலீஸ் அகாடமி தேர்வு...!

சிறந்த பயிற்சி மையமாக தமிழ்நாடு போலீஸ் அகாடமி தேர்வு...!

இந்தியாவில் காவல்துறையினருக்கான சிறந்த பயிற்சி மையமாக தமிழ்நாடு போலீஸ் அகாடமி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அளவில் சப்-இன்ஸ்பெக்டர்களின் சிறந்த பயிற்சி மையமாக தமிழ்நாடு போலீஸ் அகாடமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு போலீஸ் அகாடமியில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.

Tamilnadu Police Academy in Vandalur,Chennai - Best Government  Organisations in Chennai - Justdial

இங்கு உள்ள வசதி, வாய்ப்புகள், கட்டமைப்பு மற்றும் பயிற்சி அளிக்கும் முறை போன்றவற்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வல்லுனர் குழுவினர் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில், கடந்த 2022-ம் வருடத்தின் சிறந்த பயிற்சி மையமாக தமிழ்நாடு போலீஸ் அகாடமி பயிற்சி மையத்தை தேர்வு செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது