12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்  கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வலியுறுத்துவது  தொடர்பாக  பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு   மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

நம் அனைவரின் கூட்டு முயற்சிகளின் காரணமாக, பிரதமர் தனது முந்தைய கொள்கையை  மாற்றியமைத்து அனைத்து  மாநிலங்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சிறு கடனாளர்கள், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக  அனைத்து மாநில அரசுகளும் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது அவசியமென  அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் 2021 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில், அந்தந்த மாநில அரசுகளால் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளிவைத்து, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு தாம் கொண்டு சென்றுள்ளதாகவும்  முதலமைச்சர்  கூறியுள்ளார்.  
 
எனவே, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, 5 கோடி வரையில் நிலுவைகளைக் கொண்டுள்ள அனைத்துச் சிறு கடனாளர்களுக்கும்,  இரு காலாண்டுகளுக்கு, கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்னும் கருத்தினை நிதி அமைச்சர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்வோம் என்றும் இக்காலக்கட்டத்தில் நமது கூட்டு வலிமையை நாம் மீண்டும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.