மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்ட ஏரிகளுக்கு இன்று முதல் உபரி நீர் திறப்பு!

மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்ட ஏரிகளுக்கு இன்று முதல் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்ட ஏரிகளுக்கு இன்று முதல் உபரி நீர் திறப்பு!

மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிய பின் உபரி நீரை 100 ஏரிகளுக்கு திறந்து விட கடந்த அதிமுக ஆட்சியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து கடந்த நவம்பர் 16-ம் தேதி ஏரிகளுக்கு உபரி நீரை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். பின்னர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் ஒரு லட்சத்து 6 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏரிகளுக்கு உபரி நீர் திறக்கும் பணி இன்று நடைபெற்றது. திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் உள்ள இரண்டு ராட்சத மின் மோட்டார்கள் மூலம் வினாடிக்கு 25 புள்ளி 2 கன அடி நீரை அதிகாரிகள் திறந்து விட்டனர். இந்த தண்ணீர் மேச்சேரி அருகே உள்ள எம். காளிப்பட்டி ஏரிக்கு வந்து சேர்ந்ததை கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.