பேரறிவாளன் பரோல் கோரிய வழக்கு ஒத்திவைப்பு...

பேரறிவாளன்பரோல் கோரிய வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் பரோல் கோரிய வழக்கு ஒத்திவைப்பு...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஏற்கனவே தமிழக அரசு 30 நாட்கள் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், விடுதலை தொடர்பான வழக்கை 3 வாரம் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தாலும், தனக்கு நீண்ட நாள் ஜாமீன் வேண்டி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலம் இடைக்கால மனு தொடுத்தார்.
 
இந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி வினித் சரண் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதிட்ட பேரறிவாளன் வழக்கறிஞர்கள் ஏற்கனவே தமிழக அரசு 30 நாட்கள் ஜாமீன் வழங்கியுள்ளதால் இந்த வழக்கை 3 வாரம் ஒத்திவைக்க வேண்டும் எனவும், இது தொடர்பாக பேரறிவாளன் எழுதிய கோரிக்கை கடிதம் நீதிமன்ற பதிவாளரிடம் சமர்ப்பித்து உள்ளதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை 3 வார காலம் ஒத்திவைத்தார்.