கன்னியாகுமரியில் கோடைகால கண்காட்சி ஆரம்பம்.....! மலை, குகை, மிருகங்களின் தத்ரூபக் காட்சிகள்...! - மகிழ்ச்சியில் மக்கள்.

கன்னியாகுமரியில் கோடைகால கண்காட்சி ஆரம்பம்.....!   மலை, குகை, மிருகங்களின் தத்ரூபக் காட்சிகள்...! - மகிழ்ச்சியில்  மக்கள்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொருட்க்காட்சியை நாகர்கோவில் மேயர் திறந்து வைத்து பார்வையிட்டார். பொதுமக்களுக்காக புதியதாக அமைக்கப்பட்ட பொருட்காட்சியில் மலை குகை, மிருகங்களின் தத்துரூபக் காட்சிகள் மற்றும், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள்  இடம்பெற்றுள்ளன.  இந்த பொருட்காட்சி 45 நாட்களுக்கு மேலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்துக்கல்லூரி அருகே உள்ள அனாதை மடம் திடலில் ஆண்டுதோறும் ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மாபெரும் பொருட்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொருட்காட்சி இன்று ஆரம்பமானது. இதனை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த பொருட்காட்சியில் குளிரூட்டப்பட்ட பிரமாண்ட ஐஸ் லேண்டு(பனி உலகம்) மலை குகை, மிருகங்களின் தத்துரூபக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  

மேலும் குடும்பங்களுடன் வந்து செல்பி எடுத்துக் கொள்ள மைசூர் அரண்மனை, போன்ற பிரமிக்க வைக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குழந்தைகளுக்கான பெரிய ராட்டினம், சிறிய ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன,மேலும் வீட்டு உபயோக பொருட்கள் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

இதையும் படிக்க    }  தங்கம் விலை ரூ 480 குறைவு...!!

இந்த பொருட்காட்சியானது, 45 நாட்களுக்கு மேலாக நடைபெறும் எனவும், இந்த கோடை விடுமுறைக்கு இந்த பிரமாண்ட பொருட்காட்சியானது குமரி மக்களின் சிறந்த  பொழுதுபோக்கு அம்சமாக நிறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க    }  தமிழ்நாடு அரசின் மே தின பரிசா ?.... - அரசிடம் ஏஐடியுசி கேள்வி.