தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கு...தண்ணீரில் தத்தளிக்கும் கடலூரின் ட்ரோன் காட்சி......

தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கு காரணமாக கடலூர் மாவட்டம் தண்ணீரில் தத்தளிக்கிறது.

தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளபெருக்கு...தண்ணீரில் தத்தளிக்கும் கடலூரின் ட்ரோன் காட்சி......

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது அடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.  இந்தநிலையில் நேற்று காலை திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பபட்டு கரைபுரண்டு ஓடியது. இதில் ஆற்றின் மொத்த கொள்ளளவான 1.80 லட்சம் கன அடியில் 80 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

இதனால் ஆற்றின் கரையில் உள்ள பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பெரிய கங்கணாங்குப்பம், குண்டு உப்பலவாடி, குமரப்பன் நகர், தியாக நகர்,  வேலன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த பொதுமக்கள் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று தங்கியுள்ளனர்.

 மேலும் கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சுமார் முப்பத்தி இரண்டு சிறுமிகள் வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தத்தளித்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் படகுடன் சென்று விடுதியில் சிக்கிய 31 மாணவிகள், நான்கு உதவியாளர்கள் உள்பட அனைவரையும் படகு மூலம் பத்திரமாக மீட்டு வந்தனர்.

 மாவட்ட நிர்வாகத்தின்  அலட்சியம் காரணமாக தற்போது கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. என்றும்  உடனே மாவட்ட நிர்வாகம் அனைத்து பாதிக்கப்பட்ட மக்களையும் மீட்டு முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து, அவர்களுக்கு தேவையான உணவு அத்தியாவசியத் தேவைகளை முகாம்களில் கொடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

1973ஆம் ஆண்டு இதே போல் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஆண்டுதோறும் கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் படக்கூடிய மாவட்டம் என்பதால் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.