புறநகர் ரயில்.... இனி 5 நிமிட இடைவெளியிலா?!!

புறநகர் ரயில்.... இனி 5 நிமிட இடைவெளியிலா?!!

தெற்கு ரயில்வேதுறையில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தாத திட்டங்கள், கிடப்பில் உள்ள  திட்டங்களை விரைந்து முடித்திட ஆலோசனை வழங்கப்பட்டதாக தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

யானைக்கவுளி திட்டம்:

புதிய ரயில் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக எம்.பி.க்களுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற தயாநிதி மாறன் எம்.பி., யானைக்கவுனி மேம்பால திட்டம் 5 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது எனவும் இது தொடர்பாக நானும் அமைச்சர் சேகப்பாபுவும் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.  

மேலும் இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் யானைக்கவுணி மேம்பால திட்டத்தை ஆகஸ்ட் மாதம் முடித்துவிடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறைக்கப்பட வேண்டும்:

அதே போல் புறநகர் ரயிலில் பணிக்கு சென்று திரும்பும் நேரத்தில் அதிக கூட்ட நெரிசல் ஏற்படுவதால் புறநகர் ரயிலின் 15 நிமிட இடைவெளி என்பதை மாற்றி 5 நிமிட இடைவெளியில் இயக்கிட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கழிவறை:

ரயில்களில் கழிப்பறை முறையாக பராமரிப்பது இல்லை எனவும் கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என கனிமொழி சோமு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தயாநிதி மாறன் எம்.பி., தெரிவித்துள்ளார்.  மேலும் நிறைய ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் இல்லாத நிலை உள்ளதால் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய தயாநிதி அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

எழும்பூர் ரயில் நிலையம்:

மேலும் எழும்பூர் ரயில் நிலையத்தை புதுப்பிக்க  380 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் புதுப்பித்த பின்  கலைஞர் பெயரை வைக்க கோரிக்கை வைத்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரா?!!