உடல்நலம் பாதித்து மயங்கிய பள்ளி சிறுவன்... தோளில் சுமந்து காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்...

பள்ளி மாணவன் உயிரை தோளில் சுமந்து தக்க சமயத்தில்  காப்பாற்றிய உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு.

உடல்நலம் பாதித்து மயங்கிய பள்ளி சிறுவன்... தோளில் சுமந்து காப்பாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நான்கு முனை சந்திப்பில் பள்ளி முடிந்து பேருந்தில் செல்ல காத்திருந்த மாணவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததை கண்ட  உதவி ஆய்வாளர் செல்வம் அந்த மாணவனை தக்க சமயத்தில் தோளில் தூக்கிக்கொண்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையில்  சேர்க்கப்பட்டதால் மாணவன் உயிர் பிழைத்துள்ள சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் வட்டம் சித்திலிங்கமடம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் சுகந்தன் இவன் திருக்கோவிலூர் நான்குமுனை சந்திப்பில் அருகே உள்ள டேனிஷ் மிஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான் அவன் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி முடிந்து நான்குமுனை சந்திப்பில் வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்து இருந்தான்.

அப்போது அவன் சோர்வாக காணப்பட்டதாக தெரிகிறது. திடீர் என  மயங்கி கீழே விழும் நிலையில் அவன் இருப்பதை கண்டு அங்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டு இருந்த  திருக்கோவிலூர் உதவி ஆய்வாளர் செல்வம் சக காவலர்களை அழைத்து  மாணவனை தோளில் சுமந்துகொண்டு மருத்துவமனையில் சேர்த்து தக்க சமயத்தில் மாணவனை  காபற்றிய  சம்பவம் நெகிழ்ச்சியையும்  சற்று பரபரப்பும் ஏற்பட்டது.

தக்க நேரத்தில் மாணவனை காப்பாற்றிய உதவி ஆய்வாளர் செல்வத்திற்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். மாணவனை காப்பாற்றிய போது நான்குமுனை சந்திப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது அது தற்போது சமூக வலைத்தளத்தில் பரவலாக பரவி  கொண்டிருக்கிறது.