அரசு பள்ளியில் ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் மாணவர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் காட்சி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சீர்காழி அருகே உள்ள எடமணல் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் செல்வராஜ் மற்றும் ராமமூர்த்தி உள்ளிட்ட சில ஆசிரியர்கள் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது. ஆசிரியர்களின் கட்டளைப்படி பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த மாணவர்கள் மாடியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர்.

ஆபத்தான முறையில் எந்தவித பாதுகாப்பும் இன்றி மாணவர்கள் தொட்டியை சுத்தம் செய்து தண்ணீர் இணைப்புகளை சரி செய்தனர். இந்த காட்சி இணையதளத்தில் வைரலாகும் நிலையில், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சமூக ஆர்வலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படிக்கும் மாணவர்களை இதுபோன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது முறையான செயல் அல்ல என்றும், ஆசிரியர்கள் இதுபோன்ற நடந்து கொள்ள கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.