மேலும் 6 மாதம் அனுமதி கொடுங்க! ஸ்டெர்லைட் மனு…!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்திற்கு மேலும் 6 மாதம் அனுமதி நீட்டிக்க கோரி ஸ்டெர்லைட் மனு அளித்துள்ளது.

மேலும் 6 மாதம் அனுமதி கொடுங்க! ஸ்டெர்லைட் மனு…!

தமிழகத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவ ஆக்சிஜனின் தேவை  அதிகரித்தது. இதனால் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்குமாறு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதி வழங்குமாறு அரசுக்கு பரிந்துரைத்தது.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன் படி, கடந்த மே மாதம் 12ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை மேலும் ஆறு மாதம் மேற்கொள்ள அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மனு அளித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கிய நிலையில் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.