"பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் " - அமைச்சர் சேகர்பாபு

"பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் "  - அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கனகசபை விவகாரத்தில், சட்டப்படி பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் புரணமைப்பு பணியை முன்னிட்டு கோயிலில் இன்று பாலாலயம் நடைபெற்றது. முதற்கட்டமாக கோயிலின் ராஜகோபுரம் புரணமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். 

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்:-

" சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சியர்கள் கனகசபை விவகாரத்தில் சட்டப்படி பக்தர்கள் சுதந்திரமாக இறை வழிபாட்டு செய்ய அனைத்து உதவிகளும் இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது.  இதில் யார் பெரியவர்கள் என்ற பிரச்சனை அல்ல இறை வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு சாமி வழிபடுவதற்கு தேவையான  அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவது தான் எங்களது நோக்கம்",  

என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் சர்ச்சை: அறிவிப்பு பலகை அகற்றம்!

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்,இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் வான்மதி, அறங்காவலர் குழு உள்ளிட்ட ஏராளமானவர் உடன் இருந்தனர்.

இதையும் படிக்க     | "சீனர்களுடன் தொடர்பில் இருந்த இராஜேந்திர சோழன்" அகழாய்வில் தகவல்; அமைச்சர் பெருமிதம்!