“ஒரு ஏமாற்று அரசியல்வாதியாக ஸ்டாலின் திகழ்கிறார்....” கே. குப்பன்!!

“ஒரு ஏமாற்று அரசியல்வாதியாக ஸ்டாலின் திகழ்கிறார்....” கே. குப்பன்!!

இலவசம் என்ற வார்த்தையை உபயோகித்தால் மக்கள் மனம் புண்பட்டு விடும் என்று இலவசம் என்னும் வார்த்தையை கூட உபயோகிக்க கூடாது என்று கூறிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எங்கே, ஓசி பஸ் என்று சொல்லும் இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே, என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

ஜெயலலிதா பிறந்தநாள்:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 வது  பிறந்தநாளை முன்னிட்டு  திருவொற்றியூரில் அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில் சுமார் 5775 ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள் , 3 சக்கர வண்டி, இஸ்திரி பெட்டி ,  வேட்டி சேலை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.

முதல்வராவதை..:

இந்த நிகழ்ச்சி பல்வேறு முறை தள்ளி போனது எனவும் ஆனால் அதுவும் ஒரு நன்மைக்காக தான் எனவும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இது போன்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டம்  நடைபெறுகிறது எனவும் பேசியுள்ளார் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. குப்பன்.  மேலும் அது திருவொற்றயூரில் நடைபெறுவது கூடுதல் மகிழ்ச்சி எனவும் அடுத்த சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

தகுதி பார்த்திருந்தால்:

ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு  ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்  என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது தற்போது வரையிலும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை எனக் கூறிய அவர் தற்பொழுது சட்டப்பேரவையில் தகுதியானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அதுவும் செப்டம்பர் மாதம் முதல் தான் வழங்கப்படும் என்று  அறிவித்திருக்கிறார்கள் எனவும் இப்படி தகுதி பார்த்து மக்கள் வாக்களித்து இருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏமாற்று அரசியல்வாதி:

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக தோல்வியடையும் எனவும் மோசடிப் பேர்வழி இன்று முதலமைச்சராக வந்திருக்கிறார் எனவும் ஒரு ஏமாற்று அரசியல்வாதியாக ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் கூறியுள்ளார்.  மேலும் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள்  வைத்து இருந்தால் 1000 ரூபாய் கிடையாது என்று செப்டம்பர் மாதம் சொல்வார்கள் எனவும் செப்டம்பர் மாதத்தில் கூட ஆயிரம் ரூபாய் தருவார்கள் என்று நம்ப முடியாது எனவும் பேசியுள்ளார்.

லஞ்ச புகார்:

ஆட்சிக்கு வந்தால்  டாஸ்மார்க் கடைகள் அனைத்தையும் மூடுவதாக கூறினார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆகிறது ஒரு டாஸ்மார்க் கடையை கூட மூட வில்லை எனக் கூறிய அவர் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்தார் ஜெயலலிதா எனவும் ஆனால் அந்த அம்மா உணவகத்தை கூட மூட நினைக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.  அதனை தொடர்ந்து 14 அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு புகார் உள்ளது எனவும் இது போன்ற ஒரு அவல நிலையில் தான் திமுக ஆட்சி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:    ராமச்சந்திர ஆதித்தனார் நினைவுப்போட்டி... வெற்றியும் பரிசும்!!!