பட்டாகத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட பெண்ணை பிடிக்க தனிப்படை

பட்டாகத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட பெண்ணை பிடிக்க தனிப்படை


கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அன்மையில் சத்திய பாண்டியன் என்பவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். மறுநாளே  நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவர் பட்டப்பகலில் வெட்டிகொலை செய்யப்பட்டார். முன் பகை காரணமாக கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில்  நடைபெற்ற கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து மாநகர போலீசார் ரவுடிகளை கண்காணித்து கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது வரை சுமார் 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களையும் சைபர் கிரைம்  போலீசார் உண்ணிப்பாக கவனித்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!

“பிரண்ட்ஸ் கால் மி தமன்னா”

இந்நிலையில் கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அவர் அன்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதைப் பார்த்தாலும் பயம் - அண்ணாமலை விமர்சனம்

வன்முறையை தூண்டும் பாடல்

அதில் “எதிரி போட நினைத்தால், அவனை போடும் ஓடுனா கால வெட்டுவோம்” என்ற வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பெண் அன்மையில் நீதிமன்ற வளாகம் அருகே கோகுல் என்பவரை கொலை செய்ய நபர்களுடன் இன்ஸ்டாவில் நண்பராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநகர போலீசார் இளம் பெண் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரை பிடிக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.