கிருஷ்ணகிரியில் ரசாயன நுரையுடன் ஓடும் தென்பெண்ணை ஆறு - விவசாயிகள் அதிர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஆற்றில் மீண்டும் ரசாயன நுரைகள் பொங்கிச் செல்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் ரசாயன நுரையுடன் ஓடும் தென்பெண்ணை ஆறு - விவசாயிகள் அதிர்ச்சி

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 452 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாக உள்ள நிலையில், தற்போது அணையில் 40.51 அடி நீர் உள்ளது.  அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து 280 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றங் கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தென்பெண்ணை ஆற்றில்  நுரைகள் அதிக அளவு செல்கிறது. இந்த பிரச்சனைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.