"ஆளுநர் உடனான பிரச்சனைக்கு முதலில் தீர்வு காணுங்கள்" - அமைச்சர் பெரிய கருப்பன்

"ஆளுநர் உடனான பிரச்சனைக்கு முதலில் தீர்வு காணுங்கள்" - அமைச்சர் பெரிய கருப்பன்

மகளிர் உரிமைத் தொகையை பற்றி பேசும் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் தனக்குமான பிரச்சனைக்கு முதலில் தீர்வு காணட்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். 

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் நேற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வழியாக திறந்து வைத்த கூட்டுறவு வங்கியை  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியா முழுவது அத்யாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறினார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்தியாவிலேயே முதல்முறையாக மத்திய அரசை வலியுறுத்தியவர் முதல்வர் மு க ஸ்டாலின் என கூறினார்.

மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுபவர்கள் கட்டாயம் கைரேகை வைக்க வேண்டும் என்பதில் உள்ள குளறுபடிகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அரசு அறிவித்துள்ள வழி திட்டங்களை மக்கள் நடைமுறை வேண்டும் என கூறிய அவர்,

உரிமைத்தொகை 80 சதவீதம் பெண்களுக்கு தான் சென்றடையும் என அண்ணாமலை கூறியது குறித்து கேட்டபோது:-

அண்ணாமலை தனக்கும் ஆர் என் ரவிக்கும் உண்டான பிரச்சனையை முதலில் பேசி தீர்த்து விட்டு வரட்டும் என கிண்டலுடன் பதில் அளித்து சென்றார்.

நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா பெருங்களத்தூர் மண்டல தலைவர் காமராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.