பாம்பு கடி -சிகிச்சைக்கு தாமதம் - பலனின்றி உயிரிழந்த சிறுவன்

பாம்பு கடித்து மயக்கம் நிலைக்குச் சென்ற சிறுவனை போதைப்பொருள் உபயோகித்து மயங்கியதாக கூறி சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்

பாம்பு கடி -சிகிச்சைக்கு தாமதம் - பலனின்றி உயிரிழந்த சிறுவன்

அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,  கோமா நிலைக்கு சென்ற சிறுவன், சிகிச்சை அளிக்க தாமதமானதால் உயிரிழந்த பரிதாபம் பொதுமக்கள் சாலை மறியல்

 தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் மேலப்பாதி சேர்ந்த 8வயது சிறுவன் கடந்த 30ஆம் தேதி தனது வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்தது அதை அறியாத சிறுவன் தனது அம்மாவிடம் காலில் முள்ளு குத்தியது என்று அம்மாவிடம் தெரிவித்தார் பின்பு அந்த சிறுவன் மயக்க நிலைக்கு சென்றார் பின்பு  சிறுவனை  மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர் அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் சிறுவனை சோதித்துப் பார்த்து இரத்தப் பரிசோதனை செய்தனர் பின்பு மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோர்களிடம் கஞ்சா  சிகரெட் உள்ளிட்ட ஏதோ ஒரு போதை பொருள் சுவாசித்ததாகவும் இதன் காரணமாக தான் சிறுவன் போதையில் உள்ளார் போதை தெளிந்த உடன் சிறுவன் சரியாகி விடுவான் சிறுவன் உயிருக்கு வேற எந்த பிரச்சனையும் இல்லை என்று சிறுவனை நார்மல் வார்டுக்கு மாற்றினார்கள் மறுநாளும் அந்த சிறுவன் கண் முழிக்கவில்லை மயக்க நிலையிலேயே (கோமா ஸ்டேஜ்) இருந்தார்.

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி.. முதல் போட்டியிலேயே கலக்கிய தூத்துக்குடி மாணவர்கள்

அப்பொழுது மறுநாள் பணியில் இருந்த வேறு ஒரு மருத்துவர் சிறுவனை சோதித்துப் பார்த்ததில் சிறுவனுக்கு விஷப் பாம்பு கடித்ததாகவும் விஷம் உடம்பில் முழுமையாக பரவியதாகவும் சிறுவன் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது என்றும் சிறுவனை திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர் கூறினார் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அவசரம் அவசரமாக சிறுவனை திருவாரூர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர் பின்பு அந்த சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் சிறுவனை அழைத்துச் செல்லுங்கள் என்று சிறுவனின் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் கூறினார்கள் இதனைத் தொடர்ந்து தஞ்சை மருத்துவமனைக்கு சிறுவனை மேல் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று  சிறுவன் தஞ்சை மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேலும் படிக்க | பட்டியலின மக்களுக்கு கட்டும் வீடுகள் பணிகளில் அதிகப்படியான குளறுபடிகள் - சொர்ணா அக்காவாக மாறிய அலுவலர்

சிறுவனின் உயிர் இழப்புக்கு மயிலாடுதுறை அரசுமருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியம், மற்றும்  அரசின் மருத்துவ நிர்வாகமே காரணம் என்று கூறி இன்று இறந்த மாணவனின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வாகனம் முன்பு மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு நூற்றுக்கணக்கானோர் கூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒன்றும் அறியாத சிறுவனை போதைப் பொருள் உபயோகித்ததாக கூறி மருத்துவ சிகிச்சையில் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்