தூத்துக்குடி ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டப்பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் - கனிமொழி எம்.பி. உறுதி!

தூத்துக்குடி ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டப்பணிகள் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் - கனிமொழி எம்.பி. உறுதி!

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்மாா்ட் சிட்டி திட்டப்பணிகள் வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழி தொிவித்துள்ளாா்.


தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகுதிட்டத்தின்கீழ் பழைய பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் ,சாலைகள், கழிவுநீர் கால்வாய், பாதாளசாக்கடை திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஒருசில பணிகள் நிறைவு பெற்றிருந்தாலும் பல்வேறு பணிகள் இன்னும் நிறைவுபெறக்கூடிய சூழல் உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்மாா்ட் சிட்டி திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்பி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற பணிகளும் இனிமேல் நடைபெற உள்ள பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படியும் : பில்லு எங்க?... அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

பின்னா் செய்தியாளா்களை சந்தித்த கனிமொழி எம்.பி., தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்மாா்ட் சிட்டி திட்டப்பணிகள் வருகிற ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என குறிப்பிட்டுள்ள அவா், மாநகராட்சியில் மத்திய, மாநில அரசு சாா்பில், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தொிவித்துள்ளாா்.