விநாயகர் சிலைகளைப் போலவே கடலில் கரைக்கப்பட்ட துர்கையம்மன் சிலைகள்..!

சென்னையில் தசரா கொண்டாட்டமாக  50-க்கும் மேற்பட்ட துர்கா தேவி அம்மனின் சிலைகள் பட்டினம்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

சென்னையில் தசரா பண்டிகை கொண்டாட்டமாக 10 நாட்கள் வீட்டில் மற்றும் தெருக்களில் வைத்து வழிபட்ட துர்கா தேவியின் சிலையினை சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ள ஸ்ரீனிவசபுரம் கடற்கரையில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகளை விநாயகர் சதுர்த்தியில் கரைப்பது போலவே தசராவை கொண்டாடும் விதமாக துர்கா தேவி சிலைகளை வட மாநிலத்தவர்கள் முறைப்படி கரைத்தனர்.

நவராத்திரியின் முதல் நாளில் இருந்து 10 நாட்கள் வைத்து வழிபட்ட நிலையில் கடலில் கரைப்பதற்கு முன்பு சிறப்பு பூஜைகள் மற்றும் பாட்டு பாடி பிராத்தனை செய்து சிலைகளை கடலில் கரைத்தனர்.

காவல் நிலையத்தில் அனுமதி பெற்று வழிபட்ட சிலைகள் மட்டும் கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் 50-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கபட்டது. 30-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்திருந்த நிலையில் கரையிலிருந்து படகுகள் மூலம் துர்கா தேவி அம்மனின் சிலைகள் கொண்டு வந்து கரைக்கபட்டது.

இதையும் படிக்க   |  தஞ்சையில் கோலாகலமாகத் தொடங்கியது சதயவிழா கொண்டாட்டம்...!