ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி : போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை

விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் எதிரொலியாக பணியாளர்களுக்கு போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி : போக்குவரத்துத்துறை கடும் எச்சரிக்கை

விழுப்புரம் அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற அரசுப் பேருந்து நடத்துனர், ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பணியாளர்களை எச்சரித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயல் போக்குவரத்து கழகத்திற்கு மாபெரும் தலை குனிவையும், கலங்கத்தையும் ஏற்படுத்தியதோடு, போக்குவரத்து கழக வரலாற்றில் இது ஒரு கருப்பு நிகழ்வு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் பணியாளர்கள் இதுப்போன்ற செயலில் ஈடுபட கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இதுப்போன்ற சம்பவங்கள் நிகழா வண்ணம் பணியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.