"ஸ்டாலின் முதல்வர் ஆன பின்பு தான், அதிக மனுக்களை பெற்று வருகிறேன்", சீமான் காட்டம்!

"ஸ்டாலின் முதல்வர் ஆன பின்பு தான், அதிக மனுக்களை பெற்று வருகிறேன்", சீமான் காட்டம்!

திண்டுக்கல் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு கடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் "தாயே பூமி தாயே" என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு தாய் உயிருடன் இருக்கும் போதே கண், இதயம், நுரையீரல் போன்ற உடலுறுப்புகளை எவனாவது கூறு போட்டு விற்பானா? ஆனால் மலையை உடைத்து, விற்றுக்கொண்டிருக்கிறார்கள்  இந்த ஆட்சியாளர்கள், என குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், மலைகளை கூறு போட்டு விற்பதால், இன்னும் பதினைந்து ஆண்டுகளில் பருவமழை பொழியாமல் பாலைவனமாக மாறி பசி, பஞ்சம், பட்டினி ஏற்பட்டு அனைவரும் சாக போகிறோம் என ஆதங்கத்துடன் பேசியுள்ளார். 

மேலும் பேசிய அவர்  ஸ்டாலின் எதிர் கட்சி தலைவராக இருக்கும் போது வாங்கிய மனுக்களை விட, அதிகமான மனுக்களை இந்த 15 நாட்களில் நான் வாங்கியுள்ளேன். இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் ஒரு பிரச்சனையும் தீரவில்லை, புதிய பிரச்சனைகள் தான் உருவாகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: "கோவிட் மருந்துகளை, இந்தியா இலவசமாக வழங்கியுள்ளது", ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ஆர் பெருமிதம்!