விருது பெற்ற ரஜினிகாந்துக்கு சீமான் வாழ்த்து..!!

இந்தியாவின் மிக உயரிய திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்திற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள சீமான், தமிழ்நாட்டின் உச்சத் திரைநட்சத்திரமான ரஜினிகாந்த், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் தேசிய விருது பெற்ற பார்த்திபன்,  தனுஷ், இசையமைப்பாளர் டி. இமான், விஜய் சேதுபதி,  சிறந்த ஒலிக்கலவைக்கான தேசிய விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி மற்றும் குழந்தை நட்சத்திரம் நாகவிஷால் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைக்கலைத்துறையில் மேலும் பல சாதனைகள் புரியவும் அவர்களை வாழ்த்தியுள்ளார்.