பஸ்ஸின் மேல் ஏறி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்... தட்டிக்கேட்ட டிரைவரிடம் ஆபாச பேச்சு...

ஓட்டுனர் நடத்துனர் சேர்ந்து பள்ளி மாணவர்களை ஒருமையில் பேசி ஆபாச வார்த்தைகளால்  திட்டியதால்   பரபரப்பு ஏற்பட்டது.

பஸ்ஸின் மேல் ஏறி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்... தட்டிக்கேட்ட டிரைவரிடம் ஆபாச பேச்சு...

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து பணிமனையில் இருந்து மாதவரம் தொகுதிக்குட்பட்ட புதிய கண்ணியம்மன் நகர் நோக்கி தடம் எண் 61k அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் கூச்சலிட்டு படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு இடையூறு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் சில மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்யமுற்பட்டனர். இதனை பார்த்த பேருந்து நடத்துனர் மாணவர்களை பேருந்தின் உள்ளே வரும்படி அறிவுரை கூறியுள்ளார். ஆனால், சில வம்புக்கார மாணவர்கள் உள்ளே செல்லாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனால் கோபமடைந்த ஓட்டுனர் பேருந்தை  கோவில்பதாகை அருகே சாலையின் நடுவே நிறுத்தி வைத்து கீழே இறங்கி வந்து மாணவர்களை ஒருமையில் பேசி ஆபாச வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் பேருந்து ஓட்டுநருக்கு மாணவர்களுக்கும் இடையே கைகலப்பானது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதனால் உடனடியாக இந்த போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க மாணவர்களுக்கு ஆவடியில் இருந்து வேல்டெக் வழியாக செல்லும் பேருந்து வசதியை அதிகபடுத்த வேண்டும் படிகட்டல் தொங்கி செல்லும் மாணவர்களை அறிவுரை வழங்கி மாற்று பேருந்தில் செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கிராமத்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.