"உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்; விரைவில் சந்திப்போம்" - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்...

உங்களை எல்லாம் தாங்கள் வாழும் இடத்திலேயே நேரில் வந்து சந்திக்க இருப்பதாகவும், விரைவில் சந்திப்போம் எனவும், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

"உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்; விரைவில் சந்திப்போம்" - தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்...

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, அ.தி.மு.க கொடி கட்டப்பட்ட காரில் சென்னைக்கு வந்து அதிரடி காட்டினார். பின்னர்  அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து அமைதி காத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எம். ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.இதனிடையே தாம் அதிமுக பொதுச் செயலாளர் என குறிபிட்டு, தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள சசிகலா, தொண்டர்களை நேரில் சந்திக்க வரும்போது தம் மீது உள்ள பிரியத்தால்  புகைப்படம் எடுத்துக் கொள்வதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறியுள்ளார். அதே சமயம் தமக்கு மலர்கொத்து, பொன்னாடை மற்றும் நினைவுபரிசுகள் கொடுப்பதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள சசிகலா, உங்கள் அனைவரையும் நீங்கள் வாழும் இடத்திலேயே நேரில் வந்து சந்திக்க இருக்கிறேன் என்றும், விரைவில் சந்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.