குள்ளநரி சசிகலாவை விரட்டுவோம்,..சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய சேலம் அதிமுக.! 

குள்ளநரி சசிகலாவை விரட்டுவோம்,..சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய சேலம் அதிமுக.! 

சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ். தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி அ.தி.மு. க மாவட்ட கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இந்தக் கூட்டத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இ.பி.எஸ். தலைமை தாங்கினார். சில மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டங்களில் குள்ளநரி சசிகலாவை விரட்டுவோம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.