சாமியார் வேடமணிந்து கஞ்சா விற்பனை...குறி சொல்வதுபோல் நடித்து விற்பனை செய்து வந்தது அம்பலம்...

சென்னையில் சாமியார் வேடம் அணிந்து குறி சொல்வது போல் கஞ்சா விற்பனை செய்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சாமியார் வேடமணிந்து கஞ்சா விற்பனை...குறி சொல்வதுபோல் நடித்து விற்பனை செய்து வந்தது அம்பலம்...

சென்னை, ராயபேட்டை, மைலாப்பூர், ஐஸ் ஹவுஸ் பகுதியில் மக்களுக்கு குறி சொல்லும் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதனடிப்படையில் மைலாப்பூர் தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த தாமு என்பவரிடம் கஞ்சா வாங்குவது போல சென்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். அதில் தாமு(எ) சேகர் சாமியார் வேடம் போட்டுக்கொண்டு அப்பகுதி அப்பாவி மக்களுக்கு குறி சொல்வது போல கஞ்சா விற்பனையில் சில நாட்கள் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், கஞ்சா விற்பது குறித்து யாருக்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சாமியார் வேடம் அணிந்து சாமியாராக வலம் வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.  

குறிப்பாக தாமு(எ) சேகர் கோவில்கள் அருகில் மாலை நேரங்களில் அமர்ந்து ஆடைக்குள் மறைத்து கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.  மேலும், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜா  மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தர்மராஜத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி  ஆகியோர் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து சாமியார் வேடமணிந்த தாமுவிடம் கொடுத்து விற்பனை செய்ய சொல்லி வந்தததும் தெரிய வந்தது.

இதனையடுத்து தேனியைச் சேர்ந்த ராஜா மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஆசைதம்பி ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.