சாதி மதங்களை கடந்து உதவி செய்வதே மனிதநேயம்...! சைதை துரைசாமி...!!

சாதி மதங்களை கடந்து உதவி செய்வதே மனிதநேயம்...!  சைதை துரைசாமி...!!

சாதி, மதங்களை கடந்து உதவி செய்வதே மனிதநேயம் என முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்,"ஆளுநரின் எண்ணித் துணிக" என்ற தலைப்பில் தேசத்தின் வளர்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிறுவனர்களுடன்  கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் சிறப்பாக செயல்பட்ட சமூக செயல்பாட்டாளர்களுக்கு ஆளுநர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இதில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி, தமிழருவி மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய முன்னாள் மேயர் சைதை துரைசாமி சாதி மதங்களை கடந்து அனைவருக்கும் உதவி செய்வதே மனிதநேயம் என தெரிவித்தார்.  

முன்னதாக, ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்துகின்ற போட்டிகளுக்கு தயாராகின்ற போட்டியாளர்களை ஊக்குவித்து தன்னம்பிக்கையை கொடுப்பதாக ஆளுநரை பாராட்டினார். மேலும் அவர் நடத்திவரும் மனிதநேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி அறக்கட்டளையின் மூலம் 3671 பேர் இந்திய ஆட்சி பணி துறையிலும் தமிழக அரசு துறைகளிலும் பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர், ஆண்டுக்கு 20 ஆயிரம் நபர்களுக்கு பயிற்சி கொடுத்து வருவருவதாக சுட்டிக்காட்டினார். 

தொடர்ந்து, சாதி மதங்களை கடந்து அனைவருக்கும் உதவி செய்வதே மனிதநேயம் என்றும்  பட்டியலின  கூலி விவசாய மக்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிற அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவி செய்வதுதான் மனிதநேயத்தின் நோக்கம் என கருத்துரையாற்றினார்.