தமிழ்நாட்டில் சாகித்ய அகாடமி விருதுகள் யாருக்கென்று பார்க்கலாமா?

2022-ன் எழுத்தாளர்களுக்கான சிறந்த விருது, சாகித்ய அகாடமி விருது, தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பெருமையைத் தேடி தந்த இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் சாகித்ய அகாடமி விருதுகள் யாருக்கென்று பார்க்கலாமா?

சிறுகதை மற்றும் கவிதைகளின் தொகுப்புக்கான சாகித்ய அகாடமி புரஸ்கர் மற்றும் யுவ புரஸ்கர் விருது-2022 அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலக்கியத்திற்கு பேர் போனவர்கள் இந்தியர்கள். கற்கள் கொண்டு மேற்கத்தியர்கள் உணவுக்காக வேட்டையாடிய நேரம், இங்கு இந்தியாவில் கற்சிற்பங்கள் வடிவமைத்து கல்வெட்டுகள் பொறிக்க துவங்கி விட்டனர். அப்படிப்பட்டவர்களின் இலக்கிய வளம் பற்றி நாம் கூறவே வேண்டாம். ஆனால், கௌரவிக்க முடியும். அப்படி, இந்திய இலக்கிய படைப்பாளிகளை கௌரவிக்கக் கூடிய வகையில், மத்திய அரசால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குறிய விருது தான் சாகித்ய அகாடமி விருதுகள்.

22 மொழிகளுக்கான சிறுகதைகளுக்கான விருதுகளில் தமிழ் மொழிக்கான விருது எழுத்தாளர் மீனாட்சி எழுதிய "மல்லிகாவின் வீடு" என்ற சிறுகதைக்கு சாகித்ய அகாடமியின் 'பால சாகித்யா புராஸ்கர் 2022 விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் 'சாகித்யா யுவ புரஸ்கர் விருது-2022' என்பது சுயசரிதை, சிறு கவிதை என 23 மொழிகளில் எழுதிய எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதில் தமிழ் மொழிக்கான சாகித்ய யுவ புராஸ்கர் விருது "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்" எனும் கவிதை தொகுப்புகளை எழுதிய எழுத்தாளர் பி. காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மல்லிகாவின் வீடு என்ற சிறுகதை எழுதிய எழுத்தாளர் மீனாட்சிக்கு நவம்பர் 14ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது. 

இதேபோல் "தனித்திருக்கும் அரளிகளின் மதியம்" எனும் கவிதை தொகுப்பை எழுதிய பி. காளிமுத்துவிற்கு விருது வழங்கக்கூடிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருது வழங்கப்படும் போது விருதாளர்களுக்கு விருதுக்கான நினைவு பரிசும், ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அம்பை எழுதிய சிறுகதை, “சிவப்பு கழுத்து தான் ஒரு பச்சைப் பறவை” -க்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த நிலையில், இந்த வருடம் விருது பெற்ற மீனாட்சிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.