ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது படுகொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அறிவிப்பு...

புதுக்கோட்டை அருகே ஆடு திருடர்களை விரட்டி  பிடிக்க முயன்றபோது படுகொலை செய்யப்பட்ட  எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது படுகொலை செய்யப்பட்ட  எஸ்.ஐ. குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அறிவிப்பு...

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது,  இருசக்கர வாகனங்களில்  ஆடுகளுடன்  சிலர் அதிவேகமாக சென்றுள்ளனர்... இதனை கண்ட எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன், அவர்களை துரத்திச் சென்ற போது, திருட்டு கும்பல், எஸ்.எஸ்..ஐ. பூமிநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் விட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதில்  ரத்தவெள்ளத்தில் சாய்ந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள்  கொள்ளை கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்த  உத்தரவிட்டனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்   ஆடு திருடர்களால்  சிறப்பு  உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து துன்பமடைந்தேன் என குறிப்பிட்டுள்ளார். பூமிநாதன் குடும்பத்திற்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்,  
உதவி ஆய்வாளர்  பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க  உத்தரவிட்டுள்ளார். மேலும் பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.