8 அம்ச கோரிக்கைகள்...போராட்டத்தில் இறங்கிய அலுவலர்கள்!

8 அம்ச கோரிக்கைகள்...போராட்டத்தில் இறங்கிய அலுவலர்கள்!

8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சேலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் செயலாளர்களுக்கு பணி விதிகளை காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களுக்கு பணி வரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும் என்றும், உயர்த்தப்பட்ட விகிதத்தில் ஊதியத்தினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க : அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் அதிரடி மாற்றம்...! 

இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி அலுவலகம், அலுவலர்கள் யாரும் இன்றி வெறுச்சோடி காணப்பட்டதோடு துறை சார்ந்த அலுவல் பணிகள் அனைத்தும் முடங்கியது.