திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 நாட்களில் மட்டும் ரூ.7 கோடியே 94 லட்சம் காணிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 நாட்களில் மட்டும் ரூ.7 கோடியே 94 லட்சம் காணிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டதில் 2 நாட்களில் மட்டும் 7 கோடியே 94 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலானது தெரியவந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு  அதிகபட்சமாக சனிக்கிழமை ஒரே நாளில் 89 ஆயிரத்து 318 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக 3 கோடியே 76 லட்ச ரூபாய் செலுத்தினர்.

மேலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அதிகப்படியாக ஒரே நாளில் 90 ஆயிரத்து 885 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையாக 4 கோடியே 18 லட்சம் செலுத்தினர். இதன்மூலம் கடந்த இரு தினங்களில் மட்டும் 7 கோடியே 94 லட்சம் ரூபாய் வசூலானதான தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.