ரூ. 561 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள்...ரூ. 201 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்ட பணிகள் - முதலமைச்சர் திறப்பு!

ரூ. 561 கோடி மதிப்பிலான  திட்டப் பணிகள்...ரூ. 201 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்ட பணிகள் - முதலமைச்சர் திறப்பு!

சென்னையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 561 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 14 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும்  சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் 561 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவிலான 14 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து, 201 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் சென்னை மாநகராட்சி சார்பில் 35 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் பள்ளியில் புதுப்பிக்கும் பணிகள், 19 புதிய பூங்காக்கள் அமைக்கப் பணிகள், 5 புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகள், 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையக்கூடங்கள் கட்டும் பணிகள் ஆகிய முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையும் படிக்க : 69 வது பிறந்தநாளில் 69 கிலோ கேக் வெட்டிய எடப்பாடி...!

மேலும், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான "QR CODE" மென்பொருள் செயலியை தொடங்கி வைத்து, ஈரக்கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்திற்கு செழிப்பு என பெயரிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்வில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.