ரவுடி கருக்கா வினோத்துக்கு 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் - நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரவுடி கருக்கா வினோத்துக்கு 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் -   நீதிபதி அதிரடி உத்தரவு..!

சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி பெட்ரோல் கொண்டு வீசப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் கிண்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். 

இந்த மனுவின் அடிப்படையில் கடந்த திங்கட்கிழமை காலை புழல் சிறைத்துறை அதிகாரிகள் ரவுடி கருக்கா வினோத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை ஒன்பதாவது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். போலீசார் அளித்த மனுவின் அடிப்படையில் அவர்களுக்கு மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்திருந்தார். 

மூன்று நாட்கள் விசாரணை நிறைவு பெற்று அனுமதி நிறைவு செய்த நிலையில் இன்று மாலை கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வினோத்தை ஆஜர்ப்படுத்தினர். மீண்டும் வருகின்ற 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சந்தோஷ் உத்தரவு பிறப்பித்தார்.

புழல் மத்திய சிறையில் இருந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த போது ஆளுநரை மாற்ற வேண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய நிலையில் இன்று மீண்டும் காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வந்த போது போலீசார் அவரை பேச விடாமல் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி புழல் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

இதையும் படிக்க  |  தொடரும் சாதி வன்மம் ..! இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூர தாக்குதல்..!