பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை.. வரும் 16 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு பராமரிப்பு பணிக்காக நிறுத்தம்!!

பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை 16 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை.. வரும் 16 ஆம் தேதி முதல் 45 நாட்களுக்கு பராமரிப்பு பணிக்காக நிறுத்தம்!!

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் படி பாதை ,மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை மூலமாக மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும் ,ஆண்டிற்கு ஒரு மாதமும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் ரோப்கார் சேவை ஜுன் 16 ஆம் தேதி  முதல் 30 வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு  நிறுத்தப்பட்டு புதிய கம்பி வடம் பொருத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சென்னை ஐஐடி வல்லுனர்களால் பரிசோதனை செய்யப்பட்டு பக்தர்கள் பராமரிப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் படிப்பாதை மற்றும்  மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.