மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் சாலை மறியல்..!

மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் சாலை மறியல்..!

மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என கூறி 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தஞ்சை அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். 

தஞ்சை மாவட்டம் மணகரம்பை ஊராட்சி அரசூர் கிராமத்தில் சுமார் 323 கார்டு தாரர்களில் 277 பேருக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கோட்டாட்சியர்  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களாக அலைந்தும் முறையான பதில் இல்லை என குற்றம்சாட்டி தஞ்சை அரியலூர் இடையிலான சாலையில் அரசூர் என்ற இடத்தில் 300 -க்கும் மேற்பட்ட பெண்கள் திடிரென சாலையில் அமர்ந்து மறியலில ஈடுப்படனர்.

இதனால் அந்த சாலையின் இரு புறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பொறுப்பு நெடுஞ்செழியன் மறியலில் ஈடுப்பட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த மாதம் பணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து,  “323 கார்டில் 277 பேருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை.. ஆர்.டி.ஒ தாசில்தார் அனைவரிடமும் புகார் தெரிவித்தோம் யாரும் முறையாக பதில் சொல்லவில்லை”  என கூறுகிறார்கள்.

மேலும், குற்றம் சாட்டிய பெண்களில் ஒருவரான நித்யா கூறியதாவது:- 

ரேஷன் கார்டு பதிவு ஆகவில்லை;  எங்கள் மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணமும் கூறவில்லை என்றார். நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்கிறோம். எங்களுக்கு எப்படி விடுப்பட்டது என தெரிவிக்க வேண்டும். வேலைவெட்டி இல்லையா,.. எதற்கு அழைகிறீர்கள் ? என ஆர்.டி.ஒ கேட்கிறார். வி.ஏ.ஒ இ.சேவை மையம் கடவுளா ?  என கேட்கிறார்.

அப்படினா நாங்கள் லூசா . மரியாதை இல்லாமல் அதிகாரிகள் நடத்துகிறார்கள்.எங்கள் ரேஷன் கார்டு எப்படி பதிவாகவில்லை என கூற வேண்டும். யார் மீது தவறு என்பது தெரியவேண்டும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் வாங்கி வருகிறோம். அரசூர் என்ற கிராமம் எங்கு இருக்கிறது என அதிகாரிகள் கேட்கிறார்கள். இது அத்திவெட்டி கிராமமா..? “  என்றார்.

இதையும் படிக்க  | முதலமைச்சருக்கு சந்திராயன் -3 மாதிரி பரிசளித்து நன்றி தெரிவித்த இஸ்ரோ தலைவர்..!