உரிமைகள் என்பது கேட்டுப் பெற வேண்டியது கிடையாது.... ஆளுநர் ஆர்.என்.ரவி!!!

உரிமைகள் என்பது கேட்டுப் பெற வேண்டியது கிடையாது.... ஆளுநர் ஆர்.என்.ரவி!!!

திருநங்கைகளும் நம்மில் ஒருவர்தான் திருநங்கைகளுக்கான உரிமைகள் என்பது கேட்டுப் பெற வேண்டியது கிடையாது என ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சத்ய சாய்  திருநங்கைகளுக்கான இலவச நடன பயிற்சி பள்ளியின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினார்.  அதன்பின் திருநங்கைகள் பரதநாட்டியம் ஆடியதை மேடையில் தனது மனைவியுடன் கண்டுகளித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.

அதனை தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர் ரவி பாரத நாட்டின் கலாச்சாரத்தில் சேவை என்பது மனிதர்களுக்குள் ஒன்றி உள்ளது எனவும் இது தனித்துவம் மிக்கது எனக் கூறியதுடன் இந்த சேவை என்பது ரிஷிகள் பாரதத்தை உருவாக்கிய போது மனிதர்களுக்குள் ஒன்றி இருந்தது என்று கூறிய அவர் கடந்த சில வருடங்களாக இந்த சேவை மனப்பான்மை  மாறி உள்ளதாகவும்  வெளியே இருந்து வந்த படையெடுப்புக்குப் பிறகு இந்த சேவை மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது இந்தியாவில் புதிய தலைமையின் கீழ் சமூகம் மேம்பட்டு வருவதாகவும், திருநங்கைகளும் நம்மில் ஒருவர்தான் திருநங்கைகளுக்கான உரிமைகள் என்பது கேட்டுப் பெற வேண்டியது கிடையாது எனவும் உச்சநீதிமன்றம் அவர்களுக்கான பேச்சுரிமை எழுத்துரிமை என அனைத்தையும் கொடுத்துள்ளது  எனவும் கூறினார்.  அதனோடு ஒரு சிலரின்  ஆழ்மனதில் திருநங்கைகள் வேறு என்பது போல் எண்ணம் உள்ளதாகவும் அதில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர்கள் நம்மைப் போல் செயல்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

இதையும் படிக்க:  ஸ்டெர்லைட் ஆலை பற்றி உயர்ந்த ஒரு தலைவர் பேசுவது அழகல்ல....!!