ஸ்டெர்லைட் நிறுவனர் தமிழ்நாடு வர தடை செய்ய கோரிக்கை!!

ஸ்டெர்லைட் நிறுவனர் தமிழ்நாடு வர தடை செய்ய கோரிக்கை!!

ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனர் தமிழக வருகைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ் நாடு மக்கள் கட்சி மாநில தலைவர் காந்தி மள்ளர், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 25 ஆண்டு காலமாக தூத்துக்குடி மக்களுடைய மண்ணையும் வாழ்வாதாரத்தையும் முற்றிலும் அழித்து, தூத்துக்குடியில் சுமார் 15 பேர் படுகொலைக்கு காரணமாக ஸ்டெர்லைட் ஆலை இருந்துள்ளது, என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, ஸ்டெர்லைட் ஆலையை அப்பொழுதே, உடனடியாக மூடியிருந்தால், இந்த படுகொலை நடந்திருக்காது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்ச்சியாக விதிமீறல் மூலமாகவே நடைபெற்று இருக்கிறது. அதை மதுரை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் பல்வேறு முறையில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அதற்காக ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி 100 கோடி அபராதமும் செலுத்தி இருக்கிறது, என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆலைக்காக கையகப்படுத்திய சுமார் 1600 ஏக்கர் விவசாயம் நிலமும் இப்பொழுது முற்றிலும் அழிந்து நாசமாகிவிட்டது. ஆலைக்காக இடம் கொடுத்த மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆலையின் நிறுவனர் தமிழகத்திற்கு வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மத்திய மாநில அரசு உடனடியாக அவர் வருகையை தடை செய்ய வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க || சுற்றுலா பயணிககளை கவர்ந்திழுக்கும் மூங்கில் யானைகள்!!