ஆளுநர் ரவியை பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்...!

ஆளுநர் ரவியை  பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி  மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்...!

ஆளுநர் R.N.ரவியை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 


தமிழக ஆளுநர் R.N. ரவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மாநிலமாநில சட்டத்தின் செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டையாக செயல்படுகிறார்; அவருடைய செயல்பாடுகள் தமிழக அரசுக்கு எதிராகவே உள்ளது எனக் கூறி திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக,  பொள்ளாச்சி நகர மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு ஆளுநர் ரவியை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. 

இந்த  கையெழுத்து இயக்கத்தை பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கொ.ம.தே.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் கையெழுத்திட்டனர். 

மேலும், இதில் கலந்துகொண்ட மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது:-

"  தமிழர்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் R.N. ரவியின் செயல்பாடுகள் உள்ளது பட்டப்படிப்பு படித்த ஒன்பது லட்சம் மாணவர்களுக்கு பட்டமளிப்பதற்கு நேரமில்லை என கூறும் ஆளுநர் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மசோதாக்களை நிறைவேறாமல் கிடப்பில் போட்டுள்ளார்.  தலைவர்கள் மத நல்லிணக்கத்தை உச்சரிப்பதில்லை. எனவே தமிழர்கள் நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்",  என்று தெரிவித்தார்.

 இதையும் படிக்க     | பசுமை மயானங்கள் அமைக்க உத்தரவு! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம்!!