அதிமுக அலுவலகம் சீல் அகற்றம்....சாவி பழனிசாமி வசம் ஒப்படைப்பு!

அதிமுக அலுவலகம் சீல் அகற்றம்....சாவி பழனிசாமி வசம் ஒப்படைப்பு!

ஜூலை 11 ஆம் தேதி சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தின் சீலை அகற்றி, சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப் பிடம்  வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

ஜூலை 11 அதிமுக பொதுக்குழு கூட்டம்: 

சென்னை வானகரத்தில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் ஆத்திரத்தில் பொதுக்குழுவை புறக்கணித்த ஓ. பி.எஸ். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால்  ஓ. பி.எஸ். மற்றும் ஈ. பி.எஸ். ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை சூழல் நிலவியது. 

அதிமுக அலுவலகத்திற்கு சீல்:

ஈ. பி.எஸ் மற்றும் ஓ. பி.எஸ் தரப் பினர் மோதி கொண்டதால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

சீலை அகற்றக்கோரி வழக்கு:

அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இரு தரப் பினரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஈ. பி.எஸ்கு சாதகமாக தீர்ப்பு:

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அலுவலகத்தின் சீலை அகற்றி சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க கூறியது. மேலும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடுமென்பதால், ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும், அலுவலகத்துக்கு போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

சீலை அகற்றி சாவி ஒப்படைப்பு:

இந்த நிலையில், காலை 11 மணியளவில் அதிமுக அலுவலகத்திற்கு வந்த வட்டாட்சியர் ஜெகஜீவன், அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி சாவியை அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம்  ஒப்படைத்தார்.