வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி...! தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் காவல் துறை ஏற்பாடு..!

மேட்டுப்பாளையத்தில் வருவாய் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி...!

வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி...! தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் காவல் துறை ஏற்பாடு..!

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்களுக்கு வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை பயிற்சி செப்டம்பர் 1ஆம் தேதி அன்று தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஒத்திகை பயிற்சி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பத்தரகாளியம்மன் கோவில் வளாகத்தில், கோவை வடக்கு வருவாய் கோட்டச்சியர் பூமா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி, வட்டாச்சியர் மாலதி, காவல் கண்காணிப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் பணியில் இணைந்து செயல்படும் துறைகள் மற்றும் பிற தொடர்பு நிறுவனங்களின் விழிப்புணர்வு நிலைகளை மதிப்பீடு செய்து, வெள்ள அபாய முன் எச்சரிக்கை அமைப்பின் செயல்பாடுகள் சரிவர இயங்குகின்றதா என்பதை அறிய முடியும். 

வெள்ள அபாயக் காலத்திலும், பேரிடர் காலத்திலும் அபாய முன் எச்சரிக்கை அமைப்பினை (Early Warning System) திறம்படப் பயன்படுத்துதல், மாநிலம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தினை (Disaster Management Plan) மதிப்பாய்வு செய்து அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும், பொறுப்புகளையும், சரியாகவும், முறையாகவும் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துதல்,
மாவட்ட மற்றும் மாநில அளவில் பேரிடர் மற்றும் பல்வேறு அவசர உதவிகளுக்கு தேவையான, மனிதவளம், உபகரணங்கள், தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றை கண்டறிதல், இந்த ஒத்திகையின் போது, தேவையான வெள்ள அபாயம் குறித்த தகவல், தொலைபேசி, மின்னஞ்சல், அபாய ஒளி, குறுஞ்செய்தி மூலமாக தகவல்கள் கொடுக்கப்பட்டவுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்தந்த இடங்களில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ, அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை மாவட்ட பேரிடர் ஆணையமும் மற்ற பேரிடர் பணியில் தொடர்புள்ள அனைத்து அலுவலகங்களும், நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் சேதம், பொருள், கட்டிட, கால் நடைகள், பயிர் சேதங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து பாதிப்புக்கு ஏற்றார் போல் ஒருங்கிணைந்து செயல்படுவது போன்ற அனைத்து மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைளிலும் ஈடுபடுவதை நேரடியாக ஒத்திகை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் துணை வட்டாச்சியர் பாலமுருகன் உட்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.