ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா? - அண்ணாமலைக்கு சவால் விடும் ஹென்றி!

ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா? - அண்ணாமலைக்கு சவால் விடும் ஹென்றி!

தனியார் கட்டுமான நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூறும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஒரே மேடையில் தம்முடன் விவாதிக்க தயாரா? என அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி சவால் விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஜி. ஸ்கொயர் எனும் நிறுவனத்தின் மீது சரியான புரிதல் இல்லாமல்  பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், ரியல் எஸ்டேட் துறையில் எந்த வித முன் அனுபவமும் இல்லாமல் பேசுவதாகவும், இது குறித்து ஒரே மேடையில் தம்முடன் விவாதிக்க அண்ணாமலை தயாரா என சவால் விட்டார். 

தொடர்ந்து பா.ஜ.க.தலைவரை விமர்சித்த அவர், திருவாரூரில் அமைய உள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் கலைஞரின் அருங்காட்சியகம் மற்றும் சென்னையில் கட்டவுள்ள நினைவு இல்லம் ஆகியவற்றில் கூட தமிழக முதலமைச்சர் அனைத்து விதிகளையும் கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய துணை தலைவர் செந்தில் குமார் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.