சைவ உணவில் கிடைத்த "எலி" தலை!!! பதறி போன கஸ்டமர்!!!

சைவ உணவகத்தில் வாங்கிய உணவு பார்சலில் ”எலி” தலை இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது எலி தலை என கூறப்படுவது உண்மையா என்பதை அறிய ஆரணி போலீசார் இறைச்சி மாதிரியை உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சைவ உணவில் கிடைத்த "எலி" தலை!!! பதறி போன கஸ்டமர்!!!

இன்றைய காலத்தில் பல வகையான உனவு சம்மந்தப்பட்ட மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. மனிதன் இத்தனை கஷ்டங்கள் படுவதே உணவுக்காக தான். ஆனால், அந்த உணவில் கலப்படம், விஷம் இருந்தால் என்ன செய்வது. சரி, அசைவம் தான் கெடுதல் என்று சைவத்துக்கு மாறினாலும், அங்கும் சில பிரச்சனைகள்!! அப்படி, ஒரு சைவ உணவகத்தில் வந்த மீல்ஸ் பார்சலில், “எலி” தலை கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணியில் உள்ள ஒரு குடும்பம், கடந்த செப்டம்பர் 11, ஞாயிற்றுக்கிழமை அன்று, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் சைவ உணவகத்தில் மீல்ஸ் ஆர்டர் செய்துள்ளனர். அந்த உணவுப் பொட்டலங்களில் எலியின் தலையைக் கண்டதாகக் கூறியது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க | விழுப்புரம்: பிரபல ஃபாஸ்ட் புட் கடை பர்கரில் கையுறை துண்டு.. அதிர்ச்சியில் இளைஞர்கள்..!

திருவண்ணாமலையைச் சேர்ந்த முரளி என்பவர், செப்டம்பர் 11ஆம் தேதி, தனது வீட்டில் ஒரு இரங்கலுக்காக, தனது வீட்டில் கூடியிருந்த விருந்தினர்களுக்கு, ஒரு தனியார் சைவ உணவகத்தில் இருந்து 35 உணவுப் பொட்டலங்களை ஆர்டர் செய்தார். அவரது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யப்பட்டு, பார்சல்களில் இருந்து கிட்டத்தட்ட 30 பேர் சாப்பிட்டனர். ஆனால், அதிர்ச்சியூட்டும் வகையில், விருந்தினர்களில் ஒருவர் பீட்ரூட் பொரியலில் இறைச்சித் துண்டு ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

குடும்பத்தினர் இறைச்சியை பரிசோதித்து, அது எலியின் தலை என்று கூறினர். முரளி மற்றும் அவரது குடும்பத்தினர் உணவை மீண்டும் உணவகத்திற்கு எடுத்துச் சென்று நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். தகவல்களின் படி, உணவக ஊழியர்கள், மதிய உணவு, மண்டபத்தில் பரிமாறப்படுவதற்கு கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு முன்பு முரளியின் வீட்டிற்கு உணவு அனுப்பப்பட்டதாகக் கூறி, குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினர். இந்த சம்பவத்தால் இரு தரப்பினருக்கும் இடையே சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் படிக்க | சென்னை: பிரபல உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன சிக்கன் பிரியாணி..!

இது குறித்து ஆரணி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரையும் சமாதானம் செய்து, பார்சல்களை திருவண்ணாமலையில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். பின், உணவகம் மீது முரளி ஆரணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இச்சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி உருவாகியுள்ளது.

ஏற்கனவே, ஷவர்மா சாப்பிட்டதால் பலர் இறந்தது, பிரியாணி தின்று இறந்தது, சைவ உணவில் அசைவ கலப்படம் போன்ற பல வகையான உணவு பாதுகாப்புக்கு எதிரான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இழப்பு வீட்டில் கிடைத்த இந்த எலி தலையால், பல தலைகள் உருண்டு வருகின்றன.

மேலும் படிக்க | ஃப்ரைட் ரைஸ்-இல் கரப்பான்; அது வெங்காயம் என கூறும் ஹோட்டல்: