தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக ராசிபுரம் காவல் நிலையம் தேர்வு..!

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாக ராசிபுரம் காவல் நிலையம் தேர்வு..!

தமிழ்நாட்டின் சிறந்த காவல்  நிலையத்திற்கான விருது  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல்  நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நடந்த விழாவில் காவல் நிலையத்திற்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குனர் முனைவர்.சி.சைலேந்திரபாபு அவர்களிடம் இருந்து ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் அவர்கள் ராசிபுரம் காவல் நிலையம் சார்பாக சான்றிதழ் மற்றும் கேடயத்தை பெற்றுக் கொண்டார். 

சான்றிதழை பெற்றுக் கொண்ட சுகவனம் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம் அவர்களை பாராட்டி ஊக்குவித்தார்.

இதையும் படிக்க      | மீண்டும் இணையும் யுவன் அமீர் கூட்டணி!