இந்திய பகுதியில் மீன்பிடித்தவர்களை கைது செய்த இலங்கை கடற்படை;  ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!

இந்திய பகுதியில் மீன்பிடித்தவர்களை கைது செய்த இலங்கை கடற்படை;  ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக கூறி கைது செய்தனர். இதனை கண்டித்து, ராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து வழக்கம் போல் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது இந்திய கடல்  எல்லைக்கு உட்பட்ட நெடுந்தீவு அருகே 15 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி வந்த இலங்கை கடற்படை 15 மீனவர்களை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையிலடைத்தனர். 

மேலும், அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து யாழ்ப்பாணம் சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுயுள்ளது. இந்த நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் இச்சம்பவத்தை கண்டித்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீனவர்கள் காலை முதலே கடலுக்கு செல்லாமல் 700க்கும் மேற்பட்ட படகுகளை கரையோரங்களில் நிறுத்திவைத்துள்ளனர். இப்போராட்டத்தால் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இந்திய அரசு உடனடியாக 15 மீனவர்களயும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இலங்கை அரசின் தொடர் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க:அம்பேத்கர் ஆதரித்த பொது சிவில் சட்டம் எப்படிபட்டது? திருமாவளவன் விளக்கம்!