'அணில்களால் மின்தடை ஏற்படுகிறது' - அணில்களை முன்வைத்து ட்விட்டரில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் ராமதாஸ்-செந்தில் பாலாஜி.! 

'அணில்களால் மின்தடை ஏற்படுகிறது' - அணில்களை முன்வைத்து ட்விட்டரில் ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் ராமதாஸ்-செந்தில் பாலாஜி.! 

அணில்களால் மின்தடை ஏற்படுகிறது என்ற மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கூற்று சமூகவலைத்தளங்களில் பயங்கரமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. 

திமுக ஆட்சிக்கு வந்ததும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்த சர்ச்சைக்கு பதிலளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அணில்கள் இரு மின்கம்பிகளுக்கு இடையே செல்வதால் கம்பிகள் ஒன்றாக சேர்ந்து மின்தடை ஏற்படுகிறது என்று கூறினார். 

இது சர்ச்சையான நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் "சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?" "மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்!" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். 

இந்நிலையில்பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி*அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்,அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்!" என்று கூறியுள்ளார்.

இதன் காரணமாக அணில்களை வைத்து தமிழக அரசியலில் சண்டை நடந்துகொண்டு இருக்கிறது என்று சமூகவலைத்தளங்களில் இணையவாசிகள் கலாய்த்து வருகிறார்கள்.