கலைக்கப்படுகிறது ரஜினி மக்கள் மன்றம்..! நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு.!

கலைக்கப்படுகிறது ரஜினி மக்கள் மன்றம்..! நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு.!

ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாகவும், வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

எதிர்கால அரசியல் பிரவேசம் தொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபடுவதற்காக தனது ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியதாக தெரிவித்துள்ளார்.  

மேலும், காலச் சூழல் காரணமாக நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தமக்கு இல்லை எனவும்  ரஜினி கூறியுள்ளார். எனவே ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், சார்பு அணிகள் கலைக்கப்பட்டு முன்பு இருந்ததை போல், ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றமாகவே தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்.