” மதவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்ய தயார்” - மாணிக்கம் தாகூர் எம்.பி.

” மதவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்ய தயார்” - மாணிக்கம் தாகூர் எம்.பி.

நாட்டை மதவாத சக்திகள் இடமிருந்து காப்பாற்ற ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக  நாடாளுமன்ற உறுப்பினா் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

நாட்டை மதவாத சக்திகள் இடமிருந்து காப்பாற்ற ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக  நாடாளுமன்ற உறுப்பினா் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

ரீவில்லிபுத்தூரில ஜனாதிபதி விருது பெற்ற செவிலியரை நேரில் சென்று வாழ்த்திய எம்பி.... நாட்டை மதவாத சக்திகள் இடமிருந்து காப்பாற்ற ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக எம்.பி மாணிக்கம்தாகூர் பேட்டி.... 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பணி புரியும் ஜனாதிபதி விருது பெற்ற செவிலியர் சுகந்தியை விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர் நேரில் சென்று வாழ்த்தினார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது ரெட்டியபட்டி கிராமம். இங்குள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகந்தி என்ற செவிலியர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். 

இவர் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நர்சிங் படிப்பை முடித்து தற்போது ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிபுரியும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்டு பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி மற்றும் இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் ஆகியவைகள் அமைந்துள்ளன. 

குறிப்பாக நாடோடிகளாக வாழும் பழங்குடியின மக்களை தேடிச் சென்று அங்குள்ள கர்ப்பிணி பெண்களுக்கு சேவை செய்வதையும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்களை பராமரிப்பதையும் தனது தலையாய கடமையாகக் கொண்டு சுகந்தி சேவை செய்து வந்துள்ளார்.

இவரது சேவையை பாராட்டி கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மூ சுகந்திக்கு செவிலியர்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான நைட்டிங்கேல் விருதினை வழங்கி கௌரவப்படுத்தினார்.இதனை கேள்விப்பட்ட விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செவிலியர் சுகந்தியை அலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இன்று அவர் பணி புரியும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே சென்று அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். கடந்த வருடமும் இதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த மங்கம்மாள் என்ற செவிலியரும் இதே நைட்டிங்கேல் விருது பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இரண்டு செவிலியர்கள் ஒரே ஆரம்ப சுகாதார நிலையத்தில் விருதினை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

 முன்னதாக ரெட்டியபட்டி பகுதியில் புதிதாக அமையப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்த மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசும் போது:-

 காங்கிரஸ் தலைமை ஏற்கும் கூட்டணியில் பிரதமராக பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூட்டணிக் கட்சிகள் கூறிவந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் மதவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற ராகுல் காந்தி எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும் , தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் திமுக தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார். 

மேலும் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பான முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தொடர்ந்து அடுத்த மாதம் சிம்லாவில் நடைபெற உள்ள கூட்டத்திலும் சில முக்கிய முடிவுகள் எட்டப்பட உள்ளதாகவும் கூறினார். பாட்னாவில் நடைபெற்ற கூட்டம் குறித்து பாஜக விமர்சனம் செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை நடத்தி வருவதாகவும் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வாக்காளர்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் கூறினார்.

இதையும் படிக்க    | " முதல்வர் ரங்கசாமியின் அதிகாரத்தை தமிழிசை செளந்தரராஜன் பறித்துள்ளார்" - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.