சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்!

அதிமுக சட்டப்பேரவை துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சட்டப்படி முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்!

ஆர்.பி.உதயகுமார் நியமனம்:

அதிமுக-வின் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அறிக்கை:

கடந்த 17-ம் தேதி அன்று சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்கனவே அதிமுக-வின் துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வரும் நிலையில், தற்போது துணைத்தலைராக ஆர்.பி. உதயகுமாரை நியமித்து இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு:

அதிமுக சார்பில் சட்டப் பேரவைத் தலைவரிடமும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.  கடிதம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து சட்டப்படியே முடிவு செய்யப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.