தேர்வில் சாதி பற்றி கேள்வி? பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆதிதிராவிடர் ஆணையம்!!

சாதி குறித்த கேள்வி இடம்பெற்றது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட 4 பேருக்கு ஆதிதிராவிட, பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்வில் சாதி பற்றி கேள்வி? பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆதிதிராவிடர் ஆணையம்!!

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது என பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தாமாக முன்வந்து ஆதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் புகார் பதிவு செய்துள்ளது.

எஸ்சி என்ற வார்த்தைக்கு பதிலாக தாழ்த்தப்பட்டோர், அரிஜன் என்றோ குறிப்பிடக்கூடாது எனவும் ஆதிதிராவிடர் என மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளதை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

பல்கலைக்கழகங்களே சாதிய முறையை மறைமுகமாக புகுத்தும் நடவடிக்கை சமூக வரம்பு மீறல் என குறிப்பிட்டுள்ள ஆணையம், இதனை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது எனவும் சாடியுள்ளது. 

இதுபோன்ற செயல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் எனக்கூறி பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் வரலாற்று துறைத்தலைவரிடம் விளக்கம் கேட்டு ஆதிதிராவிட, பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.