நான் சொன்னதை போடுங்கள் இல்லையென்றால்....நீட் தேர்வு கேள்வியால் கோபமடைந்த அண்ணாமலை....!!

திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எத்தனை மருத்துவ கல்லூரிகள் உள்ளன? அதன் கட்டண விபரங்களை வெளியிட திமுக தயாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

நான் சொன்னதை போடுங்கள் இல்லையென்றால்....நீட் தேர்வு கேள்வியால் கோபமடைந்த அண்ணாமலை....!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பல நல்ல கருத்துகளை எடுத்துரைத்திருப்பதாக தெரிவித்தார்

நல் ஆளுகை மாநிலங்களுக்கான பட்டியல்  பாதுகாப்பு பிரிவில் தமிழகம் முதலிடம் வகிப்பது குறித்த கேள்விக்கு, தமிழக காவல்துறைக்கு மிக பெரிய பெருமை உள்ளது என்றும் ஆனால் இந்த குறுகிய காலக் கட்டத்தில் சட்ட ஒழுங்கு சீர் குழைந்து விட்டது. திமுக அரசு அவர்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்று  தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, இதுவரை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

நீட் மூலமாகதான் சாதாரணமான மாணவர்கள் மருத்துவம் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. நீட் தேர்வுக்கு முன்பு எத்தனை பேர் மருத்துவத்தில் சேர்ந்தார்கள், பின்னர் எத்தனை பேர் சேர்ந்துள்ளனர் என்பது குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்கிற தன்னுடைய வேண்டுகோளுக்கு  இதுவரை  திமுக அரசு பதிலளிக்கவில்லை என கூறிய அவர்,

திமுக எம்.எல். ஏ.க்களுக்கு எத்தனை மருத்துவ கல்லூரிகள் உள்ளன? அதன் கட்டண விபரங்களை வெளியிட திமுக தயாரா? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் ஆளுநர் இதுவரை தமிழக அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியதும், கோபமடைந்த அவர் நான் சொன்னதை போடுங்கள் விருப்பமில்லை என்றால் தூக்கி குப்பையில் போடுங்கள் என கோபமாக பதிலளித்தார்.